Sunday 22 November 2020

எம்.ஜி.ஆரின் முதல் படம்








இந்தியா திரை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சாதித்த சாதனைகள் ஏராளம் அவரது திரைப்படங்கள் பதித்த வெற்றிகள் ஏராளம்! அவர் கொண்டு வந்த திரைப்படங்கள் மூலம் வரலாறு படைத்து வசூலை உருவாக்கிய காவியங்கள் ஏராளம்! இப்படி ஏராளமான திரைப்படங்கள் மூலம் தன்னுடைய கருத்துக்கள் மூலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வெற்றி காவியங்களை திரைஉலகில் வெள்ளித்திரையில் பதித்துள்ளார். அந்த சாதனைகளில் சிலவற்றை இப்பொழுது பட்டியலிட்டு காண்போம்.

இதோ புரட்சித்தலைவரின் சாதனைப் பட்டியல்!

சுதந்திர இந்தியாவின் முதல் வெற்றி கதாநாயகன் புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். திரைப்படம் 1947ம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் வலம் வந்து திரை உலகில் வெற்றி வாகை சூடினார்.

பாடத் தெரிந்தவர்கள் தான் கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற தீர்மானத்தை உடைத்தெறிந்து பாடதெரியாதவர்களும் கதாநாயகனாக திரையுலகில் சாதிக்க முடியும் என்ற கொள்கை மூலம் திரையில் தோன்றி…. தான் நடித்த முதல் படமான ராஜகுமாரியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மூலம் பாட தெரியாதவர்களும் கதாநாயகனாக வலம் வர முடியும் என்பதை இத்திரைப்படம் மூலம் நிரூபித்து காண்பித்தார்-


புரட்சி நடிகரின் ராஜகுமாரி திரைப்படம் 1947ம் ஆண்டு மே மாதத்தில் வெளிவந்தது. சென்னை நகரின் மையப்பகுதியான திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்குகளிலும் பின்பு ராக்ஸி, பிராட்வே திரையரங்குகளில் இத்திரைப்படம் வெள்ளித்திரையில் பதிவானது.


ராஜகுமாரி திரைப்படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெளியிடப்பட்டு 100 நாட்களை கடந்தும் திருச்சி சேலம் கோவை வேலூர் நெல்லை பெங்களூர் நகரங்களில் வெற்றி வாகை சூடி 100 நாட்களை கடந்தது.




புரட்சி நடிகர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி வெற்றியை தொடர்ந்து ஜூபிடர் நிறுவனம் மக்கள் திலகத்தை வைத்து தொடர்ந்து.... மோகினி அபிமன்யு படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

1947 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரிக்கு பின் பைத்தியக்காரன் என்ற திரைப்படம் என் எஸ் கே அவர்கள் தயாரிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டது.

1948ஆம் ஆண்டு மோகினி திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக நடித்தவர் வி. என். ஜானகி அவர்கள். பின்னாளில் அவரே மக்கள் திலகத்தின் துணைவியாக அமைந்தார்.

முதல் ஜோடியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மாலதி ஆகியோரும்.... பைத்தியக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டி.எம்.மதுரம் அவர்கள் ஜோடியாகவும்..... மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு மீண்டும் வி.என். ஜானகி அவர்கள் கதாநாயகியாக நடித்தனர்.

டூயட் பாடல்கள் பல..... அதனை தொடர்ந்து 1948ல் வெளிவந்த ஜெமினியின் சந்திரலேகா, ஏவி.எம்மின் வேதாள உலகம், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆதித்தன் கனவு ஆகிய படங்கள் வந்தாலும் மோகினி அபிமன்யு இரண்டு படங்களும் வெற்றியை தந்தது.கிய படங்கள் வந்தாலும் மோகினி அபிமன்யு இரண்டு படங்களும் வெற்றியை தந்தது.
  
உரிமைக்குரல் பி.எஸ் ராஜு  

No comments:

Post a Comment