Wednesday 18 November 2020

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் வெற்றி விழா !!

 



விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் ஆகும். 
14.01.1965 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகி சென்னை மட்டுமல்லாது தென்னக மெங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பதித்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இரு வேடங்களில் பவனி வந்து சிறந்த நடிப்புக்கு மகுடம் சூட்டினார்.
மிகப் பிரம்மாண்டமான வசூலை ஏற்படுத்தி பல திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிநடை போட்டது.
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம். 

சென்னை நகரில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பாக இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. இக்காவியத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை காசினோ திரையரங்கில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் வெள்ளி விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்பட கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி புரட்சி நடிகர் 
எம் ஜி ஆர் அவர்களின் நடிப்புக்கு புகழாரம் சூட்டினார்கள்.
மேலும் சென்னை பிராட்வே மேகலா திரையரங்குகளில் இக்காவியத்தின் வெள்ளி விழா சீறும் சிறப்புடன் நடைபெற்றது. 

சென்னை நகரில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பில் திரையிடப்பட்ட இக்காவியம் 175 நாட்களில் 13 லட்சத்திற்கும் மேல் வசூலை அன்னாளில் வசூலாக அள்ளிக்கொடுத்து இக்காவியத்தின் சிறப்பை... வெற்றியை பதிய வைத்தது. 





சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.யார் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை ஐ.ஏ.ஏ.எஸ் திடலில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்புடன்நடைபெற்றது.

நாடோடிமன்னன் திரைப்படத்தின் வெற்றி விழா சீரும் சிறப்புடனும் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திரைப்படத்தில் பங்கு கொண்ட அத்தனை திரைப்பட கலைஞர்களும் தங்க மோதிரம் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்ட முதல் திரைப்படம் நாடோடி மன்னன் ஆகும்.

புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இருவேடங்களில் நடித்து, தயாரித்து, இயக்கிய மாபெரும் வெற்றி படைப்பு... இந்திய திரை உலகின் உன்னத தயாரிப்பாக நாடோடி மன்னன்
திகழ்ந்தது. 


     - உரிமைக்குரல் பி.எஸ் ராஜு  








#mgr #mgramachandran #puratchithalaivar #makkalthilagam  

#எம்ஜிஆர்  #எம்ஜிராமச்சந்திரன்  #மக்கள்திலகம் 
#புரட்சித்தலைவர்  #எங்கவீட்டுப்பிள்ளை   #நாடோடிமன்னன் #பேரறிஞர்அண்ணா   #விஜயாவாஹினி

No comments:

Post a Comment