Sunday, 22 November 2020
எம்.ஜி.ஆரின் முதல் படம்
Wednesday, 18 November 2020
எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் வெற்றி விழா !!
விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் ஆகும்.14.01.1965 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகி சென்னை மட்டுமல்லாது தென்னக மெங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பதித்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இரு வேடங்களில் பவனி வந்து சிறந்த நடிப்புக்கு மகுடம் சூட்டினார்.மிகப் பிரம்மாண்டமான வசூலை ஏற்படுத்தி பல திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிநடை போட்டது.எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்.சென்னை நகரில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பாக இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. இக்காவியத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை காசினோ திரையரங்கில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் வெள்ளி விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்பட கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி புரட்சி நடிகர்எம் ஜி ஆர் அவர்களின் நடிப்புக்கு புகழாரம் சூட்டினார்கள்.மேலும் சென்னை பிராட்வே மேகலா திரையரங்குகளில் இக்காவியத்தின் வெள்ளி விழா சீறும் சிறப்புடன் நடைபெற்றது.சென்னை நகரில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பில் திரையிடப்பட்ட இக்காவியம் 175 நாட்களில் 13 லட்சத்திற்கும் மேல் வசூலை அன்னாளில் வசூலாக அள்ளிக்கொடுத்து இக்காவியத்தின் சிறப்பை... வெற்றியை பதிய வைத்தது.
Tuesday, 17 November 2020
கொரோனா காலத்திலும் கொள்கை தங்கம் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையீடு !!
கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள யூகான் மாநிலத்தில் தொடங்கிய ஆட்கொல்லி நோயானா (கோவிட் 19) கொராணா….
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளை ஆட்கொண்டது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொராணாவின் தாக்கம் அதிக வீரியம் கொண்டது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மக்களை இந்நோய் பாதித்தது.தொற்று நோயாக தொடர்ந்தது…. கிட்டதட்ட 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இந்தியாவிலும் கொராணா தாக்கம் மிகப்பெரிய வீரியம் அடைந்தது. குறிப்பாக நமது தமிழகத்திலும் பல மாதங்கள் ஊரடங்கு தொடர்ந்தது.
பள்ளிகள் , கல்லூரி, பலநிர்வனங்கள், திரைத்தொழில், வர்த்தகம் என பல துறைகள் வாழ்வாதாரம் இழந்தது.
அரசு எடுத்த முடிவுகளின் படி… தளர்வுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இருந்த போதும் நவம்பர் மாதம் முதல் கிட்டதட்ட
90 சதவீகித தளர்வுகளில்…
குறிப்பாக 8 மாதங்கள் மூடப்பட்ட திரையரங்குகளை நவம்பர் 10 ம் தேதி முதல் திறக்கலாம் என்று அரசு அறிவித்தது.
தீபாவளி முன்பு திரையரங்குகள் திறக்கப்பட்டது என்றாலும்… குறிப்பிட்ட சில திரையரங்குகள் மட்டுமே திறக்கபட்டது. திரையரங்குகளில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது.
இந்த தீபாவளி திருநாளில் பல நடிகர்களின் படங்கள் மத்தியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களே மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, தூத்துக்குடி இவ்வூர்களில் அதிகம் திரையிடபட்டது.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்
10க்கும் மேற்பட்ட ஊர்களில் வெளியானது.
தீபாவளி திருநாளில் மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில்
தர்மம் தலைக்காக்கும்…
அரவிந்து திரையரங்கில்
எங்க வீட்டுப்பிள்ள என இரண்டு திரைப்படங்கள் வெளியிடப்பட்டு சாதனையை ஏற்படுத்தியது.
அதேபோல்
கோவையில் மக்கள் திலகத்தின்
தாய்க்குத் தலைமகன் டிலைட் அரங்கில் திரைப்படமும் தொடர்ந்து தேடிவந்த மாப்பிள்ளை திரைப்படமும் திரையிடப்பட்டது.
சண்முகா திரையரங்கில் காவல்காரன் திரைப்படம் தீபாவளி திருநாளில் வெளிவந்தது.
சேலம் நகரில்…
அலங்கார் திரையரங்கில் நம் நாடு திரைப்படமும் …தூத்துக்குடியில் சத்யம் திரையரங்கில் மக்கள் திலகத்தின் சிரித்து வாழவேண்டும் திரைப்படமும், திருச்சி நகரில் முருகன் திரையரங்கில் ரகசிய போலீஸ் 115 திரைப்படமும் தீபாவளி தினத்தில் வெளிவந்து வெற்றி கண்டது.
எத்தனையோ நடிகர்கள் நடித்த பல படங்கள் இருந்த போதிலும் மக்கள் திலகத்தின் காவியங்களே தீபாவளி திருநாளில்….. கொராணா காலத்தில்….. திரையரங்குக்கு வந்துள்ளது.
மக்களும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்தார்கள் என்றால்…. காலத்தை கடந்தும் சாதனையை பதிப்பவர் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே என்பது ஒரு வெற்றி முழக்கமாகும்.
இன்றும் திரையரங்குகளுக்கு வாழ்வாதாரம் கொடுப்பவர் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே முன் உதாரணமாக திகழ்கின்றார்.
எக்காலத்திலும், எப்பொழுதும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்கள் தான் மக்களுக்கு ஏற்ற திரைப்படங்களாக மக்களை மகிழ்வித்து…. எழுச்சியை உண்டாக்கும் திரைக் காவியங்களாக தொடர்ந்து பவனி வருகிறது. கடந்த 8 மாதங்களாக திரை அரங்குகள் மூடப்பட்ட போதிலும் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் மக்கள் திலகத்தின் காவியங்கள் இப்படி தொடர்ந்து வெளிவருவது மிகப்பெரிய ஒரு சாதனையாகவும்….
மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் சந்தோஷமாகவும் திகழ்கின்றது.